உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ. 40 லட்சம் மதிப்பிலானலாரி, சிமென்ட் எரிந்து சேதம்

ரூ. 40 லட்சம் மதிப்பிலானலாரி, சிமென்ட் எரிந்து சேதம்

ரூ. 40 லட்சம் மதிப்பிலானலாரி, சிமென்ட் எரிந்து சேதம்அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, கடந்த புதன்கிழமை சிமென்ட் மூட்டைகளுடன் கேரளா நோக்கி சென்ற லாரி தீப்பற்றி எரிந்ததால், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாரி, 600 சிமென்ட் மூட்டைகள் எரிந்து நாசமானது.கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள பெஸ்ட் டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான டாரஸ் சிமென்ட் லாரியை, திருச்சூரை சேர்ந்த டிரைவர் மோனச்சன், 58, திண்டுக்கல் மாவட்டம், கரிக்காலியில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, பாலக்காடு செல்வதற்காக பாளையத்திலிருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில், கடந்த புதன் இரவு சென்று கொண்டிருந்தார்.அரவக்குறிச்சி வளையப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, லாரியில் திடீரென தீப்பற்றியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மோனச்சன், சுதாரித்து லாரியை விட்டு கீழே இறங்கினார். ஆனால், லாரி முழுவதும் தீப்பற்றி சேதமடைந்தது. தீ விபத்தில் லாரி மற்றும் 600 சிமென்ட் மூட்டைகள் உள்ளிட்டவை கருகி சேதமடைந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் என, பெஸ்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளர் நாராயணன் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை