மேலும் செய்திகள்
அக்னிவீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
18-Mar-2025
விளையாட்டு விடுதியில் சேரஏப்.,6க்குள் விண்ணப்பிக்கலாம்கரூர்:விளையாட்டு விடுதிகளில் சேர ஏப்., 6க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 2025ம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான தேர்வு போட்டி வரும், 8ல் நடக்கிறது. இதில், சேர்வதற்காக, www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வரும், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 17 வயது நிரம்பிய பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிப் பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டு போட்டி, அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
18-Mar-2025