மேலும் செய்திகள்
மாமல்லை செயல் அலுவலர் பொறுப்பேற்பதில் தாமதம்
17-Aug-2024
மாமல்லை செயல் அலுவலர் பொறுப்பேற்பதில் தாமதம்
17-Aug-2024
கரூர், செப். 15-கரூர் அருகே, கோவில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, மாஜி வி.ஏ.ஓ., உள்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் சுகுணா, 39; இவர் கடந்த ஆக., 22ல் கரூர் ஆத்துார் கிராமம், சின்ன வடுகப்பட்டியில் உள்ள இடத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, (சர்வே எண், 569) கோவில் ஊழியர்களுடன் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, அங்கு சென்ற முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், 63, கண்ணம்மாள் ஆகியோர், கோவில் செயல் அலுவலர் சுகுணாவை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர்.இதுகுறித்து, செயல் அலுவலர் சுகுணா கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், கண்ணம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
17-Aug-2024
17-Aug-2024