உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொக்லைன் மோதி மூதாட்டி படுகாயம்

பொக்லைன் மோதி மூதாட்டி படுகாயம்

அரவக்குறிச்சி : நடந்து சென்ற மூதாட்டி மீது, பொக்லைன் வாகனம் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி ரங்கராஜ் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி இந்திராணி, 60. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் பள்ளப்பட்டியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் ரங்கராஜ் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்த ரவிசங்கர் என்பவர், வேகமாக ஓட்டி வந்த பொக்லைன் வாகனம் நடந்து சென்ற இந்திராணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இந்திராணியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்திராணியின் மகன் அசோக்ராஜ் அளித்த புகார்படி, பொக்லைன் ஓட்டுனர் ரவிசங்கர் மீது, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ