உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குள்ளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குள்ளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, கொசூரில் குள்ளாயி அம்மன், விநாயகர், பாம்பலம்மன், கருப்பணசுவாமி ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று கிராம முக்கியஸ்தர்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர்.நேற்று முன்தினம், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. பின் புனித நீரை சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை நடத்தினர். நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. பின்னர் புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின், வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல், பொருந்தலுார் பஞ்., சின்னரெட்டியப்பட்டி கிரா-மத்தில் பெரியக்காண்டியம்மன், ஏழு கன்னிமார்கள், விநாயகர், முருகன், மகா மந்திரமுனீஸ்வரர், அக்னி வடிவச்சி, மதுரைவீரன், கருப்பண்ணசாமி, நாகலிங்கேஸ்வரர், நாகலிங்கேஸ்வரி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு புதியதாக கோவில் கட்டுவது என கிராம பொது மக்கள் மற்றும் ரவி, முத்துசாமி பங்காளிகள் முடிவு செய்தனர்.புதிய கோவில் கட்டும் பணி முடிவுற்று, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கும்பத்திற்கு யாகவேள்வி பூஜைகள் முடிந்ததுவுடன் நேற்று காலை, 7:00 மணியளவில் சிவனடியார்கள் தமிழில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கல-சத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், மக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், கிராம மக்கள், யூனியன் குழு தலைவர் சுகந்திசசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ