மேலும் செய்திகள்
என்னென்ன உணவு உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது?
01-Sep-2024
கரூர், ஆக. 24-தமிழக அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை சார்பில், சணப்பிரட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில், சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதில், பள்ளி மாணவ, மாணவிகள் கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, கேழ்வரகு உள்ளிட்ட, சிறுதானிய உணவு வகைகள் குறித்தும், சிறுதானிய உணவுகளை சிறு வயதில் சாப்பிட தொடங்கினால் ரத்த அழுத்தம், சர்க்கரை, கெட்ட கொழுப்புச்சத்து அதிகரித்தல் உள்ளிட்ட, தொற்றா நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பது குறித்தும், இயற்கை காய்கறிகளை சாப்பிடுவதால் ஏற்படும் நலன்கள் குறித்தும், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசியர் ராஜேஸ்வரி, ஆசிரியை செல்வி, சீடு டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.
01-Sep-2024