உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் வேடத்துடன் கோரிக்கை மனு கொடுக்க வந்த சிவசேனா கட்சியினர்

விநாயகர் வேடத்துடன் கோரிக்கை மனு கொடுக்க வந்த சிவசேனா கட்சியினர்

கரூர், கரூர் மாவட்ட சிவசேனா கட்சியினர், விநாயகர் வேடம் அணிந்து, மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவில், வரும் செப்., 7 ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, விநாயகர் வேடம் அணிந்து கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். கொலுக்கட்டை செய்யும் வகையில், பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களுக்கு, தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !