உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற கமிஷன் கேட்பதால் பெண்கள் தவிப்பு

மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற கமிஷன் கேட்பதால் பெண்கள் தவிப்பு

அரவக்குறிச்சி : மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கித்தர, இடைத்தரகர்கள் கமிஷன் கேட்பதால் பெண்கள் தவித்து வருகின்றனர்.அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்-றன. இந்நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் சுய உதவிக்கு-ழுக்களில் உள்ளவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்-றனர். அவர்கள், தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கித்தருவதாக, ஏழை, எளிய பெண்களை அணுகுகின்றனர். குடும்ப கஷ்டத்தை எண்ணி கடன் பெற முயற்-சிக்கும் போது, இடைத்தரகர்கள் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களிடம் கமிஷன் தொகை கேட்கின்றனர். இந்த கமிஷன், 300 ரூபாயில் தொடங்கி, 3,000 ரூபாய் வரை நீள்கிறது. இதனால் குடும்ப வறுமைக்கு கடன் பெறும் பெண்கள், அதில் பாதி தொகையை இடைத்தரகர்களிடம் கொடுப்பதால் கடனில் சிக்கி தவிக்கின்றனர். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்ற இடைத்தரகர்கள் பெருகி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை