உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.3.20 லட்சம் திருட்டுமனைவி, மாமியார் மீது வழக்கு

ரூ.3.20 லட்சம் திருட்டுமனைவி, மாமியார் மீது வழக்கு

குளித்தலை : வீட்டில் வைத்திருந்த ரூ.3.20 லட்சத்தை காணாததால், மனைவி, மாமியார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த, புனவாசிப்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 38. இவருக்கு வயதானதால் திருமணமாகாமல் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் நல்லம்மாள்.இவர் தனது வளர்ப்பு மகள் மல்லிகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். நல்லம்மாளுக்கு கடன் இருப்பதாக கூறி பிரபுவிடமிருந்து, இரண்டு லட்சம் ரூபாயை வாங்கினார்.பின்னர் கடந்த, 2024 செப்., 29ல் திருமணமானது. அப்போது மல்லிகாவிற்கு, 5 பவுன் தாலிக்கொடி. அரை பவுன் தோடு, அரை பவுன் மோதிரம் போட்டு திருமணம் செய்தார்.கடந்த நவ.,22ல் டிராக்டர் வாங்க பிரபு வீட்டில், மூன்று லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். அதை காணவில்லை. மல்லிகா, நல்லம்மாள் ஆகியோரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.பணத்தை திருடி மோசடி செய்த மனைவி மல்லிகா, மாமியார் நல்லம்மாள் மீது கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ