உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்

கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்

கரூர், கரூர் மாவட்டத்தில், நான்கு இளம்பெண்களை பல்வேறு இடங்களில் காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கரூர், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகர் என்பவரது மகள் ேஷாபிகா, 22; டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், கணக்காளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 22ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற மகள் ேஷாபிகாவை காணவில்லை என, தந்தை பிரபாகரன், 55; கரூர் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.* கரூர் வடிவேல் நகர் எல்.என்.எஸ்., போஸ்ட் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் மனிஷா, 21; பி.எஸ்.சி., வரை படித்துள்ளார். இவர் கடந்த, 22 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மனிஷாவின் தாய் ஜெயந்தி, 45; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.* கரூர் அருகே வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை பகுதியை சேர்ந்த நாசர் பாஷா என்பவரது மகள் சபானா, 21; பி.ஏ., வரை படித்துள்ளார். இவர் கடந்த, 22 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சபானாவின் தாய் குர்ஷர்த்தா, 45; போலீசில் புகார் செய்தார்.வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.* க.பரமத்தி அருகே அத்திப்பாளையம் புதுார் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் பிரதீபா, 19; கரூர் அரசு விவசாய கல்லுாரியில் பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 21ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரதீபா, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் வெண்ணிலா, 43; போலீசில் புகார் செய்துள்ளார்.க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை