உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தையூர் சந்தை வளாகத்தில் விழுந்த பழமையான மரம்

சந்தையூர் சந்தை வளாகத்தில் விழுந்த பழமையான மரம்

கிருஷ்ணராயபுரம் : சந்தையூர், வாரச்சந்தையில் மரம் சாய்ந்து காய்கறிகள் விற்கும் இடத்தில் விழுந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூரில் வாரச்சந்தை செயல்படுகிறது. இங்கு ஆடு, கோழி, காய்கறிகள், விற்கப்படுகிறது.காய்கறிகள் விற்கும் இடத்தில், பழமையான வாதன மரம் ஒன்று இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழைக்கு, பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. இந்த மரம் விழுந்த பகுதியில், புதிதாக காய்கறிகள் விற்பனை செய்யும் கட்டட வளாகத்தில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் புதிதாக கட்டப்பட்ட வளாகம் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் விழுந்த மரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை