உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரத்து சரிவால் வெற்றிலை விலை உயர்வு

வரத்து சரிவால் வெற்றிலை விலை உயர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வெற்றிலை வரத்து சரிவு காரணமாக விலை உயர்ந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப் பட்டி, வல்லம், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி ஆகிய இடங்களில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெயில் காரணமாக வெற்றிலை செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த வெற்றிலைகளே பறிக்கப்பட்டு, உள்ளூர் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை நடக்கிறது. 100 கவுளி கொண்ட மூட்டை கடந்த மாதம், 8,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது விலை உயர்ந்து, 9,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை