உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி - வெள்ளாறு வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணி: விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி - வெள்ளாறு வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணி: விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் : கரூர் அருகே, காவிரி- வெள்ளாறு வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணி, தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றில் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அமராவதி அணை மற்றும் நொய்யல் ஆற்றின் தண்ணீர் கலக்கிறது. வெள்ளக்காலங்களில் காவிரியாற்றின் மூலம், தண்ணீர் கடலில் சேருவதை தடுக்கும் பொருட்டும், வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்கவும் காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டம், நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது.முதல் கட்டமாக, கரூர் மாவட்டம் மாயனுார் கதவணை கட்டளை முதல், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை, வாய்க்கால் வெட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக, கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் திருகாம் புலியூர் கிராமத்தில், 50 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது.தொடர்ந்து மகாதானபுரம் வடக்கு, தெற்கு, சிந்தலவாடி, பிள்ளப்பாளையம் ஆகிய கிராமங்களில், நிலங்கள் கையப்படுத்தும் பணி நடந்தது. முதலில், மாயனுார் கதவணை தென்கரை வாய்க்காலை இணைக்கும் வகை யில், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், 18 கிலோ மீட்டர் துாரம் வாய்க்கால் வெட்டும் பணிகள் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2021 ல் மார்ச் மாதம், 171 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியது. குறிப்பாக, 100 மீட்டர் அகலத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டது.இந்நிலையில், தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக, வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. குறிப்பாக, கரூர்-திருச்சி ரயில்வே பாதை- தேசிய நெடுஞ்சாலை பாதை இடையே பாலம் அமைக்க, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், பணி தொடங்கப்படாமல் உள்ளது.இந்நிலையில், தென்கரை வாய்க்காலில் ஷட்டர் அமைக்கும் பணி, மேட்டு திருகாம் புலியூர்- எழுதியாம்பட்டி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், வாய்க்கால் வெட்டிய பகுதிகளில், தரைதளத்தில் கான்கிரீட் அமை க்கும் பணி மற்றும் வாய்க்கால் கரை அரிப்புகளை தடுக்கும் வகையில், சாய்வு தளத்திலும் கான்கிரீட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அதற்காக, கரைகளில் செம்மண் கொட்டப்பட்டு, சமன் படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.100 ஆண்டு கால கோரிக்கைதென் மாவட்டங்கள் வளர்ச்சிக்காக, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம், நிறை வேற்றப்பட வேண்டும் என கடந்த, 100 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதனால், இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினார். முதல் கட்ட பணிகளும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி மாறிய நிலையில், தி.மு.க., ஆட்சியில் வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் திட்டத்தை திட்டமிட்டப்படி விரைவாக முடிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ