உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்

கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழாவையொட்டி, இன்று தேரோட்டம் நடக்கிறது.கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 4ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் ஆகியவை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவில் மண்டபத்தில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 14 மாலை தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. அதற்காக, கோவில் எதிரில் உள்ள குளத்தில், பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ் சல் உற்சவம், 21ல் புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை