உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.26.60 கோடி மதிப்பில் 760 வீடுகளுக்கு கட்டுமான பணி

ரூ.26.60 கோடி மதிப்பில் 760 வீடுகளுக்கு கட்டுமான பணி

கரூர்: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், 26.60 கோடி ரூபாய் மதிப்பில், 760 வீடுகள் கட்டும் பணிகள் நடக்கிறது என, கலெக்டர் தெரிவித்தார்.அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், வேலம்பாடி மற்றும் புங்கம்-பாடி பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணிகளையும், முத்துகவுண்டன் பாளையத்தில் தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கும் பணிகளையும் கலெக்டர் தங்-கவேல் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர் கூறியதாவது: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றி-யத்தில், 22 வீடுகள், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 113, கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 35, தான்தோன்றி ஊராட்சி ஒன்றி-யத்தில், 51, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், 101, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில், 77, கடவூர் ஊராட்சி ஒன்றி-யத்தில், 170, தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில், 191 வீடுகள் என மொத்தம், 26.60 கோடி ரூபாய் மதிப்பில், 760 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. மேலும் தொகுப்பு வீடுகள் புதுப்-பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி