உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட மைய நுாலகம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கலந்துரையாடல்

மாவட்ட மைய நுாலகம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கலந்துரையாடல்

கரூர்:டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தொடர்பாக, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யலாம் என, மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பயிற்சி வினாத்தாள் கலந்துரையாடல், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை காலை 10:00 மணி முதல் 1.00 மணி வரை கரூர் மாவட்ட மைய நுாலகம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், புஞ்சைபுகழூர், கரூர், புகழூர் அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. வரும், 29ம் தேதிக்குள் பெயர், முகவரி விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை