உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முட்செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

முட்செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம், மாயனுார் விவசாய களத்தை சுற்றி, அதிகமாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் சமுதாயக்கூட வளாகம் அருகில் விவசாய களம் உள்ளது. அறுவடை செய்யப்படும் விளை பொருட்களை விவசாயிகள் எடுத்து வந்து, களத்தில் உலர்த்தி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது களத்தை சுற்றி, அதிகமான முள் செடிகள், புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் களத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் களத்தை சுற்றி வளர்ந்து வரும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை