மேலும் செய்திகள்
மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை 'சுறுசுறு'
17-Feb-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. கதவணை சுற்றியுள்ள மீனவர்கள், மீன்களை பரிசலில் சென்று பிடித்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.நேற்று நடந்த விற்பனையில் ஜிலேப்பி மீன்கள் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன்கள், 100 ரூபாய், பாறை மீன்கள், 130 ரூபாய், கொக்கு மீன்கள், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மாயனுார், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாப்பேட்டை, புலியூர் பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
17-Feb-2025