மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள் வௌியீடு
24-Aug-2024
கரூர் விநாயகர் சிலைகளை, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்ய வழிகாட்டும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்ய மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல் www.tnpcb.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளப்பளப்பாக மாற்றுவதற்கு, மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
24-Aug-2024