முதல்வர் பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்குதங்க மோதிரம் பரிசு
முதல்வர் பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்குதங்க மோதிரம் பரிசுகரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தி.மு.க., மத்திய மாநகரம் சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தங்க மோதிரம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், மின்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த, ஒன்பது குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் கனகராஜ், மத்திய மாநகர பகுதி செயலாளர் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் ராஜா, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.