திருட்டு வழக்கில் கைதான இரண்டு பேருக்கு குண்டாஸ்
கரூர்; கரூர் அருகே, திருட்டு வழக்கில் கைது செய்யப்-பட்ட இரண்டு பேர், குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை, பசுபதிபா-ளையம், வெங்கமேடு பகுதிகளில் திருட்டு வழக்-குகளில் தொடர்புடைய, குளித்தலை முதலைப்-பட்டியை சேர்ந்த செல்வராஜ், 36; பசுபதிபாளை-யத்தை சேர்ந்த சிவக்குமார், 23; ஆகியோர் கடந்த ஆக., 3ல் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நி-லையில், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், செல்வராஜ், சிவக்குமார் ஆகிய இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, கலெக்டர் தங்கவேல் உத்த-ரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள, இரண்டு பேருக்கும் நேற்று, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.