உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொட்டியப்பட்டி கிராமத்தில்புதிய பஸ் வழித்தடம் துவக்கம்

தொட்டியப்பட்டி கிராமத்தில்புதிய பஸ் வழித்தடம் துவக்கம்

கிருஷ்ணராயபுரம்;தொட்டியப்பட்டி கிராமத்தில், புதிய பஸ் வழித்தடம் துவக்கி வைக்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி கிராமத்தில் இருந்து, குளித்தலை வரை புதிய பஸ் வழித்தடம் துவக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. புதிய வழித்தடம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் விரைவாக பள்ளி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சவுந்தரப்பிரியா, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, பழைய ஜெயங்கொண்டம் நகர தி.மு.க., செயலாளர் மோகன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை