உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் காவிரி ஆறு கதவணை அருகில் குளித்த வாலிபர் மாயம்

மாயனுார் காவிரி ஆறு கதவணை அருகில் குளித்த வாலிபர் மாயம்

கிருஷ்ணராயபுரம் : மாயனுார் காவிரி ஆறு கதவணை அருகில் குளித்த இளைஞர் ஒருவர் மாயமானதால், தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்-றனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த உள் வீரராக்கியம் பகு-தியை சேர்ந்தவர் ராகவன், 24. இவரது நண்பர்கள் முருகானந்தம், தீபக். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் மதியம் மாயனுார் காவிரி ஆறு கதவணை அருகில் குளித்தனர். அப்போது முருகா-னந்தம், தீபக் ஆகிய இருவரும் குளித்துவிட்டு காவிரி ஆற்றில் இருந்து வெளியே வந்து பார்த்த போது ராகவன் மட்டும் காவிரி ஆற்றில் குளித்த போது மாயமானது தெரியவந்தது. இது குறித்து மாயனுார் போலீசாரிடம் புகார் செய்தனர். கரூர் தீய-ணைப்பு நிலைய வீரர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி வரை காவிரி ஆற்றில் தேடிய நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி மீண்டும் நேற்று காலை துவங்கி மாலை வரை நடந்தது. காவிரி ஆற்றில் பல இடங்களில் தேடியும் மாயமான ராகவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் ராகவனை தேடி வரு-கின்றனர். மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்