உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் மோதி முதியவர் காயம்

கார் மோதி முதியவர் காயம்

அரவக்குறிச்சி, ஆக. 25-கார் மோதி, நடந்து சென்ற முதியவர் காயமடைந்தார்.தென்னிலை அருகே நாலுகால் குட்டை பஸ் ஸ்டாப் அருகே, அடையாளம் தெரியாத, 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவை மாவட்டம் சக்தி கணேஷ் நகரை சேர்ந்த குமார் என்பவரது மகன் பவளவள்ளி கிரண், 24, என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், முதியவரின் பின்னால் மோதியது.இதில் முதியவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தென்னிலை தென்பாக கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகார்படி, தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை