உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

கரூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

கரூர்: கரூரில் சுற்றித்திரிந்த, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.கரூர், 80 அடி சாலையில் கடந்த சில நாட்களாக, 45 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்-றித்திரிந்து கொண்டிருந்தார். இதுகுறித்து அப்ப-குதி மக்கள், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்-சாலையில் உள்ள, சாந்தி வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, நேற்று சாந்தி வனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், கண்காணிப்பாளர் வேல் முருகன் ஆகியோர் அடங்கிய மீட்பு குழுவினர், 80 அடி சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த, மனநலம் பாதிக்-கப்பட்ட பெண்ணை மீட்டு, திருச்சி தில்லை நகரில் உள்ள, ஆத்மா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், பெண்ணின் முக-வரி கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்-படைக்கப்படுவார் என, சாந்திவனம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !