மேலும் செய்திகள்
செயல் அலுவலர் பொறுப்பேற்பு
29-Oct-2026
குளித்தலை::திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் டவுன் பஞ்.,ல், இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் அல்லிமுத்து; இவர்,பதவி உயர்வு பெற்று, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., செயல் அலுவலராகபொறுப்பேற்றுக்கொண்டார். நங்கவரம் டவுன் பஞ்., செயல் அலுவலராக முருகேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு டவுன் பஞ்.,ல், இளநிலை உதவியாளராக இருந்து பதவி உயர்வுடன் இங்கு பொறுப்பேற்றுக்கொண்டார். டவுன் பஞ்., தலைவர்களான, மருதுார் சகுந்தலா, நங்கவரம் ராஜேஸ்வரி, துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், அலுவலர்கள், செயல் அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
29-Oct-2026