உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சுந்தர கணேசன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், 70 வயது ஓய்வதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட, ரயில் கட்டண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற கல்லுாரி, பல்கலை கழக ஆசிரியர்களுக்கு திருத்திய ஓய்வூதியத்தை கடந்த, 2.1.16 முதல் வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிச்சை முத்து, பிச்சை மணி, மாவட்ட செயலாளர் கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை