உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோடங்கிபட்டி தொடக்கப் பள்ளியில் மேலாண்மை குழு நிர்-வாகிகள் தேர்வு

கோடங்கிபட்டி தொடக்கப் பள்ளியில் மேலாண்மை குழு நிர்-வாகிகள் தேர்வு

கரூர்: கோடங்கிபட்டி, அரசு தொடக்கப் பள்ளியில் மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில், கோடங்கிபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை மறு கட்ட-மைப்புக்கான கூட்டம் நடந்தது. மாநகராட்சி, 47வது வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருப்பது, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பாதுகாப்பது, மாண-வர்கள் மீது தனி கவனம் செலுத்தி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் கூடுதல் வகுப்பு எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக, பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக முத்துலட்-சுமி, துணைத்தலைவராக முத்துவீரன், உறுப்பினர்களாக பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, சரோஜா, சரஸ்வதி, ராதிகா, இந்-திரா, ரேவதி, கல்பனா, ஜான்சிராணி, நந்தினி, மகேஸ்வரி, காளி-யம்மாள், மீனா, பிரியா, சங்கீதா, விஜயலட்சுமி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பாண்-டீஸ்வரி. கலெக்டர் தனி எழுத்தர் (கல்வி) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.* புதிய பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக் கூட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை வகித்து, தேர்தலை நடத்தினார். பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், வார்டு உறுப்பினர் நர்கீஸ் பானு முன்னிலை வகித்தனர். பார்வையாள-ராக வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) தமிழ்ச்-செல்வி கலந்து கொண்டார்.புதிய தலைவராக சுகன்யா, துணைத்தலைவராக மும்தாஜ் பேகம் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம், 24 உறுப்பினர்கள் அரசு விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி மேம்பாட்-டுக்கு முழுமையாக அர்ப்பணிப்போடு இயங்குவது, இடைநிற்-றலை குறைக்கும் வகையில் செயல்படுவது, அரசின் புதிய திட்ட-மான மாணவர்களுக்கு வாழை இலையில் விருந்தளிக்கும் போஜன திட்டத்தை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உறுதிமொழி எடுத்தனர். பட்டதாரி ஆசிரியர் ஷகிலாபானு நன்றி கூறினார். ஆசிரியர்கள் ராபியா பஸ்ரி, ரொகையா பீவி, கவிதா, கிருஷ்ண-வேணி, புவனேஸ்வரி, ஜோதிமணி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை