உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடை கால்வாயை துார் வார வேண்டும்

சாக்கடை கால்வாயை துார் வார வேண்டும்

கரூர்: கரூர் அருகே, வாங்கல் அக்ரஹாரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பொது மக்கள் வசிக்கின்றனர். ஆனால், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவு நீர் வாய்க்கால், பல மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால், கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது. மழை காலங்களில், கழிவுநீருடன் சேர்ந்து, மழை நீரும் சாலையில் செல்கிறது. சாக்கடை கால்வாயை துார் வார, வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி