உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாம்பு கடித்து தொழிலாளி பலி குளித்தலை, ஜூன் 16-

பாம்பு கடித்து தொழிலாளி பலி குளித்தலை, ஜூன் 16-

பாம்பு கடித்து மரம் வெட்டும் தொழிலாளி இறந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த, களக்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, 49. சிற்ப தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், 21, மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். கடந்த, 9ல் குளித்தலை அடுத்த, பாதிரிப்பட்டி வாசுதேவன் என்பவரது மாந்தோப்பில் மதியம், 3:30 மணியளவில் மரம் வெட்டும் வேலை முடித்துவிட்டு துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.இது குறித்து, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை