உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலமலையில் கல் குவாரி கருத்து கேட்பு கூட்டம்

பாலமலையில் கல் குவாரி கருத்து கேட்பு கூட்டம்

அரவக்குறிச்சி, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், க.பரமத்தி அருகே பாலமலையில், தனியார் திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.அதில், புன்னம் கிராமத்தில் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைப்பது குறித்து, அரசு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பிறகு, கல் குவாரி அமைக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், அரசு நிர்ணயம் செய்யும் அளவை தாண்டி, குவாரிகளில் கற்களை எடுக்க அரசு அனுமதிக்கக் கூடாது எனவும், கல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்பட்டு, விவசாயம் சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பலர் கருத்துகளை தெரிவித்தனர். அதை கேட்ட டி.ஆர்.ஓ., கண்ணன், பொது மக்களின் கருத்துக்கள், பதிவு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் முடிவுக்கு ஏற்ப, மாவட்ட நிர்வாகம் செயல்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் புன்னம் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி