உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

சின்னதாராபுரத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

அரவக்குறிச்சி : ரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து எம்.எல்.ஏ., இளங்கோ ஆய்வு செய்தார்.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, சின்ன தாராபுரம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ., இளங்கோ நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, சின்னதாராபுரம் பகுதியில் நடந்து வரும் நுாலக கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதே போல கூடலுார் மேற்கு ஊராட்சியில் உள்ள, எம்.ஜி.ஆர்., நகர் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் குறித்தும், எம்.எல்.ஏ., இளங்கோ நேரில் ஆய்வு செய்தார். தி.மு.க., நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்