உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாப பலி

வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாப பலி

குளித்தலை: நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் கிராமம், சின்ன வேப்பநத்தத்தை சேர்ந்தவர் விக்ரம், 25; கரூர் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக். உடன் பணிபுரியும் நண்பரான, குளித்தலை அடுத்த வேங்காம்பட்டியை சேர்ந்தவரின் திருமண நிகழ்ச்சிக்கு, நேற்று சென்றனர்.பின், மதியம், 2:00 மணியளவில், பொய்கைபுத்துார் தென்கரை பாசன வாய்க்காலில், 4 நண்பர்களுடன் குளித்துள்ளார். விக்ரமுக்கு நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்த நண்பர்கள் நீரில் மூழ்கிய விக்ரமை மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிக்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விக்ரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை