உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரிம இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம்

கரிம இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம்

கரூர், கரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ், ஒரம்புபாளையம் கிராமத்தில் கரிம இடுபொருட்கள் என்ற தலைப்பில், இலவச பயிற்சி முகாம் நடந்தது.அதில் மண் மாதிரிகள் எடுப்பது, மண் பரிசோதனை செய்வதால் ஏற்படும் பலன்கள், மண் மாதிரி அட்டைகள் பெறும் முறைகள், இயற்கை உரங்கள் தயாரிப்பு, மண் புழு உரங்களின் அவசியம், கரிம இடுபொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.பயிற்சி முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் சண்முக சுந்தரம், வேளாண்மை அலுவலர் ேஹமாவதி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் மாரிமுத்து, உதவி தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை