உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி சந்தை நான்கு வழிச்சாலையில், இரணியமங்கலம் பஞ்., அரசு ஆரம்ப சுகாதார மையம் காலனி குடியிருப்பு பகுதியில் கடந்த, 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பஞ்., மற்றும் யூனியன் நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. இதையடுத்து, குடிநீர் வழங்காததை கண்டித்து அப்ப-குதி மக்கள் காலி குடங்களுடன், பணிக்கம்பட்டி சந்தை நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., பிரபாகரன் ஆகியோர், மறி-யலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போ-தைக்கு, மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி மறியலை கைவிடுங்கள். உங்கள் பிரச்னை சம்பந்தமாக பஞ்., நிர்வாகம், யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றனர். பின் அங்கு வந்த, குளித்தலை யூனியன் கமிஷனர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டி துாய்மை செய்யப்பட்டு, தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி