உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அரசு மருத்துவமனையில் 2 நாளில் 10 பிரசவம்;மக்கள் வரவேற்பு

குளித்தலை அரசு மருத்துவமனையில் 2 நாளில் 10 பிரசவம்;மக்கள் வரவேற்பு

குளித்தலை, குளித்தலை அரசு மருத்துவமனையில், இரண்டு நாளில் 10 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. அதில், 8 சுக பிரசவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. குளித்தலை, மாயனுார், தோகைமலை, அய்யர்மலை, பஞ்சப்பட்டி, தரகம்பட்டி, நங்கவரம், நச்சலுார், மருதுார் மற்றும் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, முசிறி, தொட்டியம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள், முதியோர்கள் என பலர் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.மேலும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தாய், சேய் பிரசவ வார்டு தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஐந்து பெண்களுக்கும், நேற்று ஐந்து பெண்களுக்கும் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் 8 சுக பிரசவமாகவும், இரண்டு அறுவை சிகிச்சை மூலமும் நடந்தது. இதில் நான்கு ஆண் குழந்தை, ஆறு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த மருத்துவமனையில் அதிகளவு சுப பிரசவங்கள் நடைபெறுவதால், கிராமப்புற பெண்கள் அதிகளவு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை