உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 24 குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதியுதவி

24 குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதியுதவி

ஈரோடு: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் (பதிவு பெற்றபதிவு பெறாத தொழிலாளர்கள்) மூலம், கட்டுமான பணியிடத்து விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.பணியிடத்தில் விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் நியமனதாரர்கள்வாரிசுதாரர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.மரணமடைந்த தொழிலாளி மேசன், எலக்ட்ரீசியன், சித்தாள் போன்ற ஏதேனும் ஒரு அமைப்பு சாரா கட்டுமானம் சார்ந்த வேலை செய்பவராக இருக்க வேண்டும்.ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வங்கி மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 24 குடும்பங்களுக்கு, 1.20 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி