உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்று முதுகலை ஆசிரியர் தேர்வு கரூரில் 3,914 பேர் பங்கேற்பு

இன்று முதுகலை ஆசிரியர் தேர்வு கரூரில் 3,914 பேர் பங்கேற்பு

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்-பாட்டு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வு, 15 மையங்களில், 3,914 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்-பட்டுள்ளன. இன்று (12ம் தேதி) தேர்வு மையத்திற்கு காலை 8:30 முதல் 9:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 9:30 மணிக்கு பிறகு தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட-மாட்டார்கள்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு மையங்-களுக்கு, தேர்வர்கள் உரிய நேரத்தில் சென்றடைய போதுமான பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு நாளில், மையங்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்-டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், முதலுதவி செய்து தர அறுவுறுத்தப்பட்டுள்-ளது.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை