உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணையில் இருந்து 1.41 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

மாயனுார் கதவணையில் இருந்து 1.41 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

கரூர், மாயனுார் கதவணைக்கு, 1.41 லட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது.மேட்டூர் அணையில் இருந்து, இந்தாண்டு ஜூன், 12 முதல் காவிரி டெல்டாவில் குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்ந்துள்ளது. அங்கிருந்து உபரி முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளதால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருகிறது.நேற்று மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு, 1.41 லட்சம் கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 984 கன அடி தண்ணீரும், பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் காவிரியாற்று பகுதிக்கு, பொதுமக்கள் செல்வதை தடுக்க வருவாய்த் துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,779 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாசன வாய்க்கால்களில், 181 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.73 அடியாக இருந்தது. க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 17.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு, 129 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை