உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூதாடிய 15 பேர் கைது

சூதாடிய 15 பேர் கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த புதுவாடி அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில், பணம் வைத்து சூதாடுவதாக, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்-தினம் மாலை, சம்பந்தப்பட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்-டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய பஞ்சப்பட்டி பாரதி-ராஜா, 39, கீரனுார் மாணிக்கசுந்தரம், 55, கருப்பசாமி, 60, கொட்டாம்பட்டி சுப்பிரமணியன், 47, கீரனுார் கருப்பண்ணன், 70, புதுவாடி தாமரைச்செல்வன், 57, கீரனுார் அழகுராஜ், 70, ஆகிய ஏழு பேரை பிடித்து, 10,000 ரூபாய் பறிமுதல் செய்தனர் இதேபோல், முனையம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய சக்தி மகாலிங்கம், 40, முனையம்பட்டி மகாலிங்கம், 38, வெங்-கட்ராமன், 41, நல்லகுமார், 30, சின்னராசு, 36, வடிவேல், 39, சசிகுமார், 23, செல்வம், 39, ஆகிய எட்டு பேரை பிடித்து, 16,980 ரூபாய் பறிமுதல் செய்தனர். இவர்கள் 15 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ