மக்கள் நீதிமன்றத்தில் 1,526 வழக்குகளுக்கு தீர்வு
கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த, மக்கள் நீதிமன்-றத்தில், 1,526 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று கரூர், குளித்தலை, கிருஷ்-ணராயபுரம், அரவக்குறிச்சியில் உள்ள, நீதிமன்-றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.அதில், வங்கி சிவில் வழக்குகள், காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் உள்பட, 1,624 வழக்குகள் சமரச தீர்-வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இறுதியாக, 1,526 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 13 கோடியே, 32 லட்சத்து, 48 ஆயிரத்து, 468 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.கரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான அனுராதா உடனிருந்தார்.