உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி

மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர், தெற்கு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் ராகுல், 24; வெல்டர். இவர், நேற்று முன்தினம் காகித ஆலை பாய்லர் பிரிவில், வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்-சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த ராகுல், கரூர் தனியார் மருத்-துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே காந்தம்பாளையம் பகு-தியை சேர்ந்த கலிங்க துரை மனைவி யேசு ரத்தினம், 62; இவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில், மின் இணைப்பு கொடுக்கும் பணியில் இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், படுகாயமடைந்த யேசு ரத்தினம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை