உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 24 அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

24 அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் வடபாகத்தில் உள்ள புனித மரி-யன்னை அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில், முதல்வர் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்-டத்தில், 705 அரசு தொடக்கப்பள்ளிகளில், 30,144 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். 24 அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 1,677 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், கரூர் மாந-கராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு சங்ககளின் இணை பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.* குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்-டியில் அரசு நிதிஉதவி பெற்று செயல்பட்டு வரும், தனம் தொடக்-கப்பள்ளியில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாகி பிரபு, பஞ்., தலைவர் ரம்யா, குளித்தலை தி,மு.க., ஒன்றிய செயலர்கள் சந்-திரன், தியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநி-திகள் கலந்து கொண்டனர்.இதேபோல், பரளி, கண்டியூர், பாரைப்பட்டி கிராமங்களில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை