3 தலைமுறையாக பயன்படுத்தி வந்த ரயில் தண்டவாள பாதை மூடல்: தாசில்தார் ஆய்வு
குளித்தலை: குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள வாலாந்துார் கிராம பொது மக்கள், மூன்று தலைமுறையாக ரயில்வே தண்ட-வாளம் வழியாக செல்லும் பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையை, நேற்று முன்தினம் ரயில்வே நிர்வாகம் நிரந்தர-மாக மூடியது. இதையறிந்த அங்கு வந்த அப்பகுதி மக்கள், 'ரயில்வே நிர்வாகம் குகை வழிப்பாதை அமைப்பதாக உறுதி அளித்ததன்படி, குகை வழிப்பாதை அமைத்து கொடுத்து விட்டு, இந்த பாதையை மூடவேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து, யூனியன் கவுன்சிலர் பழனிசாமி தலைமையில் கிராம மக்கள், எம்.எல்.ஏ., சப்கலெக்டர், தாசில்தார் ஆகியோர்க-ளிடம், 'குகை வழிப்பாதை அமைக்கும் வரை, இதற்கு முன் பயன்படுத்தி வந்த பாதையை திறந்து விடவேண்டும். மேலும், குகை வழிப்பாதையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தாசில்தார் இந்துமதி, தலைமை மண்டல துணை தாசில்தார் மருதை, ஆர்.ஐ., தமிழரசி மற்றும் எஸ்.ஐ., முருகன் ஆகியோர், ரயில்வே நிர்வாகம் அடைக்கப்பட்ட பாதையை ஆய்வு செய்-தனர். தொடர்ந்து, தாசில்தார் இந்துமதி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அலுவலரிடம், 'பொது மக்கள், பள்ளி, கல்-லுாரி மாணவ, மாணவியர் பாதிக்காத வகையில் மூடிய பாதையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.