போதையில் வாகனம் ஓட்டிய 384 பேருக்கு அபராதம்
கரூர், கரூரில் கடந்த, இரண்டாண்டுகளில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக, 384 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கரூர் நகர போக்குவரத்து போலீசார், மனோகரா கார்னர், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் மற்றும் திருகாம்புலியூர் பகுதிகளில், தானியங்கி கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.அதன் மூலம், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ெஹல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டுகிறவர்கள், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் ஓட்டுகிறவர்கள் உள்ளிட்ட, 25 வகையான போக்குவரத்து விதிமுறைகளை, மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.கரூர் நகரில் கடந்த, 2023 ல், 114 பேர், 2024ல், 270 பேர் உள்பட, 384 பேர் மது போதையில் வாகனம் ஓட்டியதாக, 38 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.