உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி அருகே மணல் கடத்திய 4 பேருக்கு வலை

க.பரமத்தி அருகே மணல் கடத்திய 4 பேருக்கு வலை

கரூர்: அமராவதி ஆற்று மணலை கடத்தி குவித்து வைத்த, நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, அமராவதி ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் சட்ட விரோதமாக குவித்து வைக்-கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு மற்றும் வருவாய்த்துறையினர், அனியா-புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனி-யாருக்கு சொந்தமான இடத்தில், நான்கு யூனிட் ஆற்று மணல் குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, மணல் மற்றும் இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த க.பரமத்தி போலீசார், மணலை கடத்தி குவித்து வைத்திருந்த, கரூரை சேர்ந்த அருண், பிரபு, கோபால், சக்திவேல் ஆகிய, நான்கு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை