உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, வேங்கம்பட்டியில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம், கிழக்கு ஒன்றிய செயலர் கதிரவன் தலைமையில் நடந்தது.கரூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தினி யுவராஜ், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம், குளித்தலை தொகுதி பொறுப்பாளர் கேசவன், தலைமை பேச்சாளர் மனோகர் பாபு ஆகியோர், அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ