கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 6 கடைகளுக்கு சீல் வைப்பு
கரூர்: கரூர், வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான, ஆறு கடைக-ளுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று, 'சீல்' வைத்தனர்.கரூர் அருகில், வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டு களாக ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடங்களை மீட்க கோரி, உயர்நீதி-மன்றம் மதுரை கிளையில், சேலம் திருத்தொண்டர் சபை நிறு-வனர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக, மீட்கப்படாமல் இருந்தது.இதையடுத்து, கோவில் நிலங்களை மீட்க முயற்சி செய்யாத, அதி-காரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். பின், நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, இடங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த மாதம், வெண்ணைமலை கோவிலுக்கு உரிய கடைகளை, 'சீல்' வைக்கும் பணி நடந்த போது பொதுமக்களுக்கும், போலீசா-ருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், கோவிலுக்கு சொந்தமான இடங்களை, டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நி-லையில், வெண்ணைமலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று கடைகளுக்கு, 'சீல்' வைக்கும் பணியில் ஈடு-பட்டனர்.இதனால் அப்பகுதியில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாது-காப்புக்காக குவிக்கப்பட்டனர். பின் போலீசார் உதவியுடன் அங்-குள்ள, கடைகளுக்கு 'சீல்' வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடு-பட்டனர். இதையறிந்த, ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு சொந்த-மான பொருட்களை எடுத்துக் கொண்டு, கடைகளை காலி செய்து விட்டு, ஷட்டர் கதவுகளை கழற்றி கொண்டு சென்றனர். பின், அதிகாரிகள் தகர சீட்டுகள் வைத்து, ஆறு கடைகளை அடைத்த பின், 'சீல்' வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்-டது.