கரூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பரணி பார்க் பள்ளியில் 6,000 பேர் பங்கேற்பு
கரூர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கரூர் பரணி பார்க் பள்ளி வளாகத்தில், 6,000 பேர் யோகாசனம் செய்தனர்.கரூர், பரணி பார்க் பள்ளி வளாகத்தில், 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. கல்விக்குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன் பேசுகையில், ''அனைவருக்கும் பயனுள்ள யோகா கலையை, நம் தாய்நாடு அளித்துள்ளது ஈடு இணையற்ற கொடையாகும்.யோகா மூலம் உலக ஒற்றுமையையும், நமது நாட்டின் பாரம்பரிய பெருமையையும் உலக அரங்கில் பிரதிபலிக்கும் வகையில், பரணி பார்க் கல்விக் குழுமத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், 6,000 பேர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி பி.எட். கல்லுாரி முதல்வர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.