உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கண் சிகிச்சை முகாமில் 633 பேருக்கு பரிசோதனை

கண் சிகிச்சை முகாமில் 633 பேருக்கு பரிசோதனை

கரூர், புகழூர், டி.என்.பி.எல்., செய்தித்தாள் காகித நிறுவன மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) ராஜலிங்கம் முகாமை தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன், காகித ஆலையை சுற்றியுள்ள மக்களக்காக முகாம் நடத்தப்படுகிறது. இங்கு நடத்த முகாமில், 633 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து,கண் விழித்திரையில் பார்வையிழப்பு (சர்க்கரை நோய் காரணமாக), பிறவி கண்புரை, கண்நீர் அழுத்த நோய், கண் எரிச்சல், கண் வலி, கண்ணின் கருவிழியில் புண், கண் பார்வை குறைபாடு, இதர கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்து கொண்டனர். டாக்டர் பரிந்துரை செய்யப்பட்ட கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ள, 345 பேருக்கு, 93 ஆயிரம் ரூபாய்- மதிப்பிலான மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.மேலும் முகாமில், 101 பேருக்கு கண்புரை உள்ளது என கண்டறியப்பட்டு, முகாம் தினத்தன்றே அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை, உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், முதன்மை மேலாளர் (மனிதவளம்) வெங்கடேசன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை